MARC காட்சி

Back
வட்டக்கோட்டை
245 : _ _ |a வட்டக்கோட்டை -
300 : _ _ |a கோட்டை
500 : _ _ |a

          இந்தக் கோட்டை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படை அலுவலராக இருந்து, 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் சண்டையில் திருவிதாங்கூர் படையுடன் மோதிய டச்சுத் தளபதியான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் மேற்பார்வையில் செங்கற்கோட்டையாக இருந்த இந்தக் கோட்டை கற்கோட்டையாக மாற்றி கட்டப்பட்டது. காலப்போக்கில் அவர் திருவிதாங்கூர் அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகி திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1809 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்தப்போது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானைச் சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை ஆயுதசாலை ஆகியவையும் உள்ளன. மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12 ம் நூற்றாண்டில் இந்த கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

520 : _ _ |a

         கடலுக்குள் நீண்டு இருக்கும் இந்தக் கோட்டை கடலில் பயணம் செய்யும்கப்பல்களைக் கண்காணிக்க கூடியதாக உள்ளது. முற்காலத்தில் குமரி ஒருதுறைமுகமாகச் செயல்பட்டு வந்தது. இப்போதைய சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகமே அக்காலத் துறைமுகமாக விளங்கியுள்ளது. அதோடுமுத்துக்குளிக்கும் தொழிலும் நடைபெற்றுள்ளது. இந்த துறைமுகத்தைக்கண்காணிக்கும் விதமாகவும் கோட்டை அமைந்துள்ளது.

653 : _ _ |a கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, கோட்டை, மத்தியத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு
710 : _ _ |a தமிழ்நாடு அரசு
752 : _ _ |a வட்டக்கோட்டை |c வட்டக்கோட்டை |d கன்னியாகுமரி |f நாகர்கோயில்
906 : _ _ |a சங்ககாலம்
914 : _ _ |a 8.12569
915 : _ _ |a 77.5652
934 : _ _ |a கன்னியாகுமரி, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், குளச்சல் துறைமுகம், மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல் அணை, உலக்கை அருவி, சொத்தவிளை கடற்கரை
995 : _ _ |a TVA_MON_00042
barcode : TVA_MON_00042
book category : கோட்டைகள்
cover :
Primary File :

TVA_MON_00042_வட்டக்கோட்டை-0001.jpg

TVA_MON_00042_வட்டக்கோட்டை-0002.jpg

TVA_MON_00042_வட்டக்கோட்டை-0003.jpg

TVA_MON_00042_வட்டக்கோட்டை-0004.jpg